நீ என்னை கண்களில்
வைத்துப் பார்க்கும் போதெல்லாம்
என் இதயம்
ஒரு மெளனக் காதல்
பாடலாக மாறுகிறது

உன்னுடைய கைப்பிடியால்
என் கனவுகள் நிஜமாகிறது

முற்பிறவியின் பந்தமே
இப்பிறப்பிலும்
நாம் இணைந்தது

காத்திருத்தலும்
சுகம் தான்
தொலைதூர
காதலில்

கவிதையை
ரசிக்கும் போதும்
அதில் அழகிய
வரிகள் நீ

உன் காதலின் முன்
என் அன்பெல்லாம்
வெறும் பூஜியம் தான்

கனவு கலைந்த பின்னும்
விழிகள் மூடிக் கிடக்கின்றேன்
உன் பிம்பம் கலைந்திட கூடாதென
காதலர் தின வாழ்த்துக்கள் என் காதலே

அழகை பார்க்கும் காதலை விட
அன்பை பார்க்கும் காதலுக்கு
ஒரு சின்ன புன்னகை
போதுமே காதலின்
ஆழம் என்னவென்று புரிய
அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துகள்

வழி தவறியாவது
வர மாட்டாயோ
என் விழிமுன்னென
காத்திருக்கிறேன்

ஒரு நொடி
தோள் கொடு
என் பல வருட
கனவை
நனவாக்கி கொள்ள