கண்களில் பிறக்கும் கனவு
இதயத்தில் நனையும் காதல்
நீ கிறுக்கிய வரிகள்
என்னை கிறுக்காக்கி
கொண்டிருக்கு அன்பே
மௌனத்தில் உதிரும் மூச்சுகள்
உடலை விட ஆவியை
அதிகம் எரிக்கின்றன
நீரில் மாட்டி
கொண்ட இலையாய்
சிக்கி தவிக்கிறேன்
உன் காதலெனும் நதியில்
தத்தளித்த போதும் சுகமாய்
தினமும்
நிழலாய் தொடர்கிறேன்
நீ என் ஒளி
என நினைத்து
முழு மதியாய்
உனை ரசித்த
மனம்
நீ தேய்பிறை
ஆனாலும்
ரசிக்கும் சற்றும்
மாற்றமில்லாது
இப்போதும்
எப்போதும்
சுவாசத்தின் தூரத்தில்
தோன்றும் ஒளி
அதுவே வேட்கையின் நிழல்
இருளில் கூட
அவளின் மூச்சு வழியாக
காதல் தெரிகிறது
எட்டா தூரத்தில்
நீயென்றாலும்
உனை எட்டி
விடுகிறேன்
கற்பனையில்
உன்னருகில்
நம் நினைவுகளுடன்
விடிகிறது ஒவ்வொரு
பொழுதும் நம்
புகைப்படங்களுடன்
நகர்கிறது ஒவ்வொரு
ஊரடங்கும் எனக்கு
💖 பக்கம் 265 / 478
📋 Copied