மூச்சுக்குள் மூச்சாக
கலந்த உணர்வுதான்
ஆழமான காதல்
வாழும் போது மட்டுமல்ல
வாழ்க்கை முடியும்
நேரத்திலும்
வாழும் காதல் என்றுமே
அழகானது
மீண்டு விட்டேன்
என்பதைவிட
மீட்டெடுத்தாய்
என்பதே நிஜம்
வெறுமை எனும்
தனிமையிலிருந்து
அன்பால்
தோளில் சாயும் சுகம்
நாளெல்லாம் தேடும் ஓய்வு
தோற்று தான்
போகிறது
என் கோபங்கள்
உன் அன்பிற்கு முன்னால்
கண்ணாடியில்
பிரதிபலிக்காத அழகு
காதலின் தீண்டல்களில்
மட்டும் தெரியும்
பார்வை மட்டும் போதாது
அருகில் வரும் ஒவ்வொரு நொடியும்
அகத்தின் ஆசையை ஊட்டுகிறது
காணாத போது
கண்களுக்குள்
வாழ்கின்றாய்
நம் அன்பை
முழுமையாக புரிந்து கொண்ட
ஒரு உறவால்
எப்போதும் நம்மை விட்டு
பிரிந்து செல்ல முடியாது
உன் விரல்கள்
தீண்டவே
அடிக்கடி வியர்க்கிறது
என் விழிகள்
💖 பக்கம் 237 / 478
📋 Copied