நகரா நொடிகளும்
நகர்கிறது
உன்னருகில் வேகமாய்
நகரா நொடிகளும்
நகர்கிறது
உன்னருகில் வேகமாய்
சிறிய பார்வையில்
மூன்று உலகங்களையும்
அடக்கிக்கொள்ளும்
ஒரு வாஞ்சை துளிர்கிறது
நினைக்க நினைக்க
பேரழகு
உன்னை போலவே
மனதில் நிழலாடும்
உன் நினைவுகளும்
என்னவனே
மழையில் நடந்த நடையல்ல
இருதயத்தில் பதிந்த
நிழல் தான் அழகு
இம்சையான இன்பம்
உன் அமைதி
ஆழ் மனதுவரை
பேரிரைச்சலாய்
ஏதேதோ பேசி
கொல்கிறது
உன்
அருகாமை போதும்
தாய்மடியாய்
நினைத்து நானுறங்க
விழிகளில் இருக்கும் காதல்
உதடுகள் சொல்லாத
உண்மையைக் கூறும்
நீ இல்லாமல் நான் இல்லை
என்பது கூட பொய்யாக
இருக்கலாம் ஆனால்
உன்னை நினைக்காமல்
நான் இல்லை என்பதே மெய்
மௌனத்தில்
புன்னகை நுழைந்தால்
அது ஒரு ரொமான்ஸ் பூத்த தருணம்
நமக்கிடையில்
சிறு விரிசல்
விழுந்தாலும்
மனமேனோ
தனித்து தவித்து போகுது