தூரத்தில் இருந்தாலும்
உன் நினைவுகள்
எனக்கு அருகிலே உள்ளன

நீ பேசும்
ஒவ்வொரு வார்த்தையும்
என் இதயத்தின்
தூய்மையான இசை

கைகள் கூடத் தட்டவில்லை
ஆனால் இதயங்கள் ஆடையை
கிழிக்காத நெருக்கத்தில் இருந்தன

நட்சத்திரங்கள்
இரவில் மட்டும் மின்னும்
ஆனால் சிலரின் நினைவுகள்
இரவெல்லாம் விழிக்க வைக்கும்

மலர்களில்லாத
போதும்
ரசிக்க தூண்டுது
கிளைகளை
மனம்
நறுமணமமாய்
நீயிருப்பதால்
மனதில்

காதல் என்பது அழகான தீ
அதை அணைக்கும் துணிச்சல்
நம்மில் இல்லை

விழிகளில்
ஜீவனும் ஏது
நீ விடைபெறும்
போது உனைக்காண

என் மன நிறைவென்பது
நீயன்றி வேறில்லை

அருகில் இல்லாமலும்
உயிர் முழுவதும் வாழ்கிறவர்களே
காதலின் உண்மை முகம்

உன் மனதை
வாசித்த போது
தான்
என் எண்ணங்களும்
எழுத்தானது
நீயும் என்றோ
வாசிப்பாய் என்றே