நான் என்றோ
தொலைந்தேன்
உன்னுள்
உனக்குள் நான்

சில அஸ்த்தமனங்கள்
ஏனோ
விரும்புவதேயில்ல
விடியலை

துளித் துளியாய்
உன் புன்னகை
துளிர்க்கின்றதே
ஒரு நேசம்

சிலர் சிரிப்பால்
வாழ்வை மாற்றிவிடுகிறார்கள்

பிரிக்க முடியாத சொந்தம்
மறக்க முடியாத பந்தம்
தவிர்க்க முடியாத உயிர்
அனைத்துமே உன் அன்பு மட்டுமே

காதல் என்பது
கண்கள் பார்க்கும் அழகு அல்ல
இதயம் உணரும் உண்மை

நொடி நொடியாய்
காதல் செய்யும்
என் காதல்
உன் மீது
மட்டுமே

மூச்சின் நிறைவை விட
காதலின் நெருக்கம் தான்
உயிரோட்டமாக இருக்கும்

நடை பயணிக்கவும்
தெரியாதவளிடம்
என் இதயத்தை ஓட்டிக்கொடுத்தேன்
சாயும் வரை வரவே வந்தாள்

நீயில்லா ஒவ்வொரு பொழுதும்
நம் நினைவுகளைத் தவிர
வேறு எதற்கும்
அனுமதி இல்லை
என் அருகில்