நீ என்ன
புரிஞ்சிக்களையேனு
தான் வருத்தப்பட்டேன்
ஆனா இப்பதான் புரியுது
உனக்கு என்ன
பிடிக்கவே இல்லைன்னு

மென்மையான உதட்டின் அருகில்
நேரம் கூட நின்றுவிடுகிறது

என் கனவுக்கும்
உயிருண்டு
கண்ணுக்குள்
நீயிருப்பதால்
காதலாய்

இப்படியே
இருந்துவிடேன்
என்னுடனேயே
நீயும் முப்பொழுதும்
உன்னுள்ளேயே
நானும் வாழ

கையில் பிடிக்காமல்
மனதில் பிடித்துவைத்ததே
உண்மை காதல்

காதலின் மொழி
சில நேரங்களில்
தோலில் எழுதப்படும்

தொட்டாலும் அறிய முடியாத
சில காதல்கள்
ஒரு பார்வையால் எரிகின்றன

தேய்ந்து வளரும்
நிலவாய்
நம் காதல்
ஊடலுக்கு
பின் பௌர்ணமியாக

உன் உதடுகள் பேசும்
மௌன மொழிகள்
என் இதயத்தை
ஏக்கத்தில் ஆழ்த்துகின்றன

காணாமல் போன
என் புன்னகையும்
நொடியில் மலர்கிறது
உனை காணும்
போதுதான் மகிழ்வோடு