இதயத்தில் உருவான இசை
அவளின் சிரிப்பால் தான் பிறந்தது

உன் ஒரு முத்தம்
எனது இதயத்தை
நேராக கனவுகளின் வெளிச்சத்திற்கு
அழைத்துச் செல்கிறது

என் இதயம் உன்னிடம்
அடகு வைத்துவிட்டேன்
திருப்பி கொடுக்க வேண்டாம்
காதலாகவே வைத்துக்கொள்

இருவர்
மௌனமாக இருந்தாலும்
காதல் உரையாடிவிடும்

இதயம் காயப்பட்டாலும்
பாசம் மறையாது
அது ஆழமடையும்

தேகம் பேசும் மொழி
இதயம் கேட்கும் கவிதை

நொடிகளில் தொடங்கி
மணித்தியாலங்களையும்
கடந்து ரசிக்கின்றேன்
அலுப்பதுமில்லை
சலிப்பதுமில்லை
உன்னுடனான
உரையாடல்களில்

மாயைக்கு மயங்காத
மனம்
மூழ்கி போனது
மாய உலகுக்குள்
காண்பதிலெல்லாம்
நீயென்பதால்

மிகவும் பிடித்த
பொருளொன்று
தொலைந்து
மீண்டும்
கைகளில்
கிடைத்தது போல்
மனம் மகிழ்வில்
உனை காணாமலிருந்து
கண்கள் கண்டதும்

சினுங்கும் கொலுசுக்கு
அஞ்சியே
மெல்ல நடை போடுது
பாதமும்
உன் உறக்கத்தை
சீண்டிட
கூடாதென்றே