நிஜத்தில் நடக்க வேண்டும்
என்று நினைப்பதெல்லாம்
கனவில் நடக்கிறது
கனவில் கூட
நடக்கக் கூடாது
என்று நினைப்தெல்லாம்
நிஜத்தில் நடக்கிறது

சில நொடிகளில்
எடுக்கும் முடிவுகள்
வாழ்க்கையையே
புரட்டி போட்டு
விட்டு செல்கிறது

வாழ்க்கை
என்ற படத்தில்
சிறப்பாக நடிப்பவர்கள்
நல்லவர்களாகவும்
நடிக்கத் தெரியாதவர்கள்
கெட்டவர்களாகவும்
ஆக்கப்படுகின்றனர்

வாழ்க்கை குறுகியது
ஆனால் நல்ல நினைவுகள்
நீளமானவை

அழுகை கூட
அழகு தான்
குழந்தைகளிடம் மட்டும்

உன் கனவுகளை முடிக்க முடியாது
என்று சொல்வோர்
அவர்கள் தங்கள்
முயற்சியில் தோற்றவர்கள்

தன்னம்பிக்கை தான்
நம் வாழ்விற்கான வெற்றி
பிறர் கை எதிர்பார்த்து
நம் வாழ்க்கையை
வாழ எண்ணினால்
நமக்கான வாழ்வு
அங்கே பறிபோகும்
குறையோ நிறையோ
நமக்கான வாழ்வை
நாமே தீர்மானிப்போம்

நற்குணங்களை
தகுதியாக்கிக் கொண்டு
நான் இப்படி தான்
என்று நிலைத்து நில்லுங்கள்
புரிபவர்கள் புரிந்து வருவார்கள்
புரியாதவர்கள் விலகி செல்வார்கள்
எதுவாகினும் நட்டம் நமக்கில்லை

வாழ்க்கையில் துன்பங்கள்
இலவசம் போன்றவை
தானாகவே நம்மை தேடிவரும்
ஆனால் சந்தோசம் என்பது
நாம் கடுமையாக போராடி
வாங்க வேண்டியது

உங்கள் அன்பும்
நீங்கள் தரும்
முக்கியத்துவமுமே
உங்களை நேசிக்க
வைக்கக் கூடும்