தோல்வி என்பது
இடைவேளை
வெற்றி என்பது
இறுதி நேர ஒளிக்கதிர்

பேசிய வார்த்தைகள்
நினைவுகளாகவும்
பேசாத வார்த்தைகள்
கவிதைகளாகவும்

மனதில் இருப்பது
செயலில் மாறும்போது தான்
முன்னேற்றம் தோன்றும்

சில நேரம் மௌனம் பேசும்
அது வாழ்க்கையின்
உண்மை குரல்

வாழ்க்கையில்
வெற்றி அடைய
மிகமுக்கியமான மந்திரம்
உனது ரகசியங்களை
ஒருபோதும்
யாரிடமும் பகிராதே

மாற்றங்கள் யாவும்
காயத்தின் முடிவிலே
தொடக்கம் பெறுகின்றது

ஓடும்போது பின்னே பார்க்காதே
பார்த்தால், பின்னே இருப்பவன்
முன்னே இருப்பான்

உணராத ஒரு அன்பிற்கு
கடலாக இருப்பதை விட
நம்மை உணரும் ஓர் அன்பிற்கு
சிறு ஈரமாக இருந்துவிட்டு
உலர்ந்து விடுவது உத்தமம்

மனமும் கண்ணாடியைபோல்தான்
உடையும்வரை யாரையும்
காயப்படுத்துவதில்லை

ஒரு விஷயத்தை பற்றி
நாம் யோசிக்க
வேண்டுமென்றால்
அதற்கு மதிப்பு
இருக்க வேண்டும்
தகுதி இல்லாத
ஒன்றை பற்றி
யோசித்து
நம் நிம்மதியை
இழந்து விடக்கூடாது