வெற்றியை தேடாதே
நீ செய்யும் உழைப்பே
அதை உன்னை தேட வைக்கும்

அளவு என்பது
உப்புக்கு மட்டும் அல்ல
சில உறவுகளும் தான்

சந்தோஷத்தை தேடிச் செல்ல வேண்டாம்
உன் மனதில் அதை விதைத்துவிடு

சிலந்தி வலையாய்
சில நினைவலைகள்
என்னில்

விழுந்தால் எழுவேன்
என்ற நம்பிக்கையிருக்க வேண்டும்
யாரையும் நம்பிஏறகூடாது
வாழ்க்கையெனும் ஏணியில்

எதிர் பாரத சந்திப்புகள் தான்
பல மறக்க முடியாத
நினைவுகளை தரும்

நெருங்கவும் முடியாமல்
விலகவும் முடியாமல்
சில உறவுகள்
சொல்லவும் முடியாமல்
சில ஆசைகள்
மறக்கவும் முடியாமல்
வெறுக்கவும் முடியாமல்
சில நினைவுகள்

உன்னை வெல்லும் தகுதி
தோல்விக்கே இருக்கும்
போது தோல்வியை
வெல்லும் தகுதி உனக்கு
இல்லாமலா போய்விடும்

நெருக்கடிகள் நம்மை வீழ்த்த
நம் முன் நிற்கும் போது
அந்தக் கணமே
மனம் உடைந்தாலும்
மனத்தின் ஆழத்தில் இருக்கும்
உற்சாகம் நம்மை மீண்டும்
மேலே கொண்டு வரும்
ஆகையால் வாழ்க்கையில்
"மன அழுத்தத்தை" தவிர்க்கவும்

அன்பானவர்களிடம்
எதிர்பார்ப்பது
ஒன்று மட்டுமே
இன்பமோ துன்பமோ
உண்மையாய் இரு
அதுவே போதுமானது