சிலநேரம் இருட்டை
அனுபவிக்க வேண்டியிருக்கும்
ஒளியின் மதிப்பை உணர்வதற்கு
மழை ஓய்ந்த பின்பு
வானம் வெளிச்சமாய் தெரியும்
சிரமங்களை கடந்த பின்பு
வாழ்க்கையும் புதியதாய் தென்படும்
எல்லோரும் உன்னை
புரிந்து கொள்வார்கள்
என்று எதிர்பார்க்காதே
சிலர் உன் கதையை கூட
கேட்க விரும்ப மாட்டார்கள்
முயற்சிக்கு வழி தெரியாது
ஆனால் அதை
வெற்றி தேடி வரும்
என் வாழ்வில் எத்தனை
துன்பம் இருந்தாலும்
அது என் இதழ்களுக்கு
தெரிவதில்லை எப்பொழுதும்
புன்னகைத்து
கொண்டே இருக்கிறது
மௌனம் பேசியதில்
நிறைந்திருக்கும் கண்ணீர்
வார்த்தைகளை விட
உண்மையாய் இருக்கும்
கடவுள் கொடுத்த வரமாக
இருந்தாலும் கடவுளுக்கே
கிடைக்காத வரம் நட்பு
சந்தேகம் எழத
தொடங்கும் போதே
அதை நிறுத்தி விடு
உடைந்த பின் வருந்தாதே
நன்மையான செயலை
உடனடியாக செய்து விடு
மகிழ்ச்சி முத்தமிடும்
வாழ்க்கை வாழ்வதில் இல்லை
நம் விருப்பத்தில் இருக்கிறது
சோதனை வந்தால் ஓடாதே
எதிர்கொள் அதில்தான்
நம் வலிமை தெரியவேண்டும்
📖 பக்கம் 304 / 606
📋 Copied