படிக்க படிக்க
சுவாரிஸ்யம்
இல்லாமல் போவது
புத்தகம் மட்டுமல்ல
இன்று மனித
மனங்களும் தான்
படிக்க படிக்க
சுவாரிஸ்யம்
இல்லாமல் போவது
புத்தகம் மட்டுமல்ல
இன்று மனித
மனங்களும் தான்
முடிந்தால் செய்
முடியாவிட்டாலும் முயற்சி செய்
முடியும் வரை விடாதே
சிரிப்பு வெளியில் இருந்தாலும்
உள்ளத்தில் ஒரு மௌனம் இருக்கும்
வார்த்தைகளை தேடி
களைத்து போனேன்
சில உணர்வுகள
வெளிபடுத்த
வார்த்தைகளே
இல்லை போல
வாய்ப்புகளை உருவாக்க
தெரியாதவர்களை விட
வாய்ப்புகளை பயன்படுத்தத்
தெரியாதவர்கள் தான் அதிகம்
எனது தேவை
என்பது அவசியம்
எனக்கு மட்டுமே
தேவையென்பது சுயநலம்
இன்னும் தேவையென்பது
பேராசை
எதுவும் தேவையில்லை
என்பதே மனிதாபிமானம்
நிறம் மாறும்
பச்சோந்திகளை விட
அடிக்கடி தன் மனம்
மாறும் மனிதர்களிடமே
அதிக கவனம் தேவை
முடிவுகள் இல்லாத மனிதன்
முயற்சியில் மட்டும்
முழுமை அடைகிறான்
பயம்
மனதை முடக்கும் பூட்டு
தன்னம்பிக்கை
அதை திறக்கும் சாவி
வாழ்க்கையில் எது ஒன்று
அதிக இன்பத்தை தருகின்றதோ
அதுவே சில வேளைகளில்
அதிக துன்பத்தையும் தரும்