நம் பயம் எதிரிக்கு தைரியம்
நம் அமைதி அவனுக்கு குழப்பம்
குழப்பத்தில் இருப்பவன்
எப்போதும் ஜெயித்ததில்லை

உயிரோடு இருக்க
ஒரு பிறவி போதும்
ஆனால் உன்
நட்போடு வாழ பல
ஜென்மம் வேண்டும்

தினமும் ஓய்வில்லாமல்
உழைப்பதால் தான்
எல்லா இடத்திலும்
உயரத்தில் உள்ளது
கடிகாரம்

முயற்சி இல்லாமல்
அதிர்ஷ்டம் கூட
வேலை செய்யாது

வரும் கனவையெல்லாம்
நிஜமென்று
நம்ப சொல்கிறது இரவு
அவை யாவும் பொய் என்று
நிரூப்பித்து விடுகிறது பகல்

பிறரை நேசிப்பதை விட
உன்னை நேசிப்பவனை
அதிகம் நேசி

சில வலிகள்
சொல்ல முடியாது
உணர்த்தவும் முடியாது
ஆனாலும் அவை
உள்ளுக்குள் நம்மை அழிக்கின்றன

எப்போதும்
உன்னை புரிந்தவர்களுக்கு
மட்டும்
நீ நல்ல புத்தகமாக
இருந்தால் போதும்
புரியாதவர்க்கு என்றுமே
புதிராகவே இருந்தால்
போதும்
கவலை கொள்ள
தேவையில்லை

எப்போதும் தன்னம்பிக்கை
மட்டும் இழக்கக்கூடாது

யாரையும் கவர
வேண்டும் என்று
எண்ணம் இல்லாதவர்கள்
எல்லோரையும் கவர்ந்து
விடுகிறார்கள்