எவ்வளவு கெட்டவர்களாக
இருந்தாலும் அவர்களிடம்
நாம் கற்றுக்கொள்ள ஏதாவது
ஒரு நல்ல பழக்கம்
கண்டிப்பாக இருக்கும்

வியர்வை சிந்தாமல்
கிடைக்கும் வெற்றி
மணம் இல்லாத பூ போல

சில நேரங்களில்
அமைதியே
அழுகையின் வடிவம்

கஷ்டங்கள் பெரியவை
என்று கடவுளிடம்
சொல்லாதீர்கள் மாறாக
கஷ்டங்களை கடந்து
தைரியம் உயர்ந்தது
என்று சொல்லுங்கள்

நாம் உணர்ந்து
விரும்பி செய்யும்
காரியங்கள் மட்டுமே
நம் வாழ்க்கையை
அழகுபடுத்தும்

உற்சாகம் இல்லாமல்
எதுவும் சாதிக்க முடியாது

அன்புக்கு விலை
என்றைக்குமே அன்பாக
தான் இருக்க முடியும்
அதனால் தான் அதை
வாங்கவும் விற்கவும்
முடிவதில்லை

சூழ்நிலைனு மனதை
ஆறுதல்
படுத்திக் கொண்டாலும்
சில வலிகளை மட்டும்
தவிர்க்க முடிவதேயில்ல
சில விசயங்களில்

கண்ணில் கோபத்தையும்
இதயத்தில் பாசத்தையும்
வைத்திருக்கும்
ஒரே உறவு அப்பா

எதையும் நம்பாதே எல்லாம்
இங்கு பாதியில் வீதியில்
விதியால் சதி செய்து
செல்லும் உறவுகளே