சிலரின் மௌனம்
திமிரல்ல
அவர்களுக்குள்
இருக்கும் வலி

ஒவ்வொரு அனுபவமும்
வாழ்க்கையின் புதிய பாடம்
அதை ஏற்றுக் கொள்ளும்
மனமே வளர்ச்சி

ஒரு மரம் நிழல் தரும் வரை
அதன் வேர்கள்
நிலத்தில் போராடவேண்டும்

வெற்றி கிடைக்காமல்
விட்டால் பரவாயில்லை
முயற்சி இல்லாமல் விட்டுவிடாதே

இப்போது செய்யும்
ஒரு செயல்
நாளைய வெற்றிக்கான விதை

கல்லூரியிலும் கற்றுக்கொள்ள முடியாத
வாழ்க்கை பாடத்தை
சில இழப்புகள் கற்றுத்தருது

அவர்களெல்லாம்
அப்படி கிடையாது என
நினைக்க வைக்கும் சிலர்தான்
அப்படியாகவே இருக்கிறார்கள்

ஏங்கிக் கிடத்தலில்
ஏதும் நடக்கப் போவதில்லை
என்றான பின்
அதை கடத்தல் என்பது
வலி நிறைந்த போராட்டமே

சிரிப்பின் பின்னால்
சில நேரம்
ஒரு அழுகை நிரம்பியிருக்கும்

அழகு காட்சிகள்
சாலையில் இல்லை
மனதில் தான் இருக்கின்றன