வாழ்க்கை காட்டும் நிதர்சனம்
நாம் வாழும்
ஒவ்வொரு கணமும்
ஒரு பாடம் என்பதே

எந்த நேரமும்
மாற்றம் வரலாம்
ஆனால் நீ மாறாமல்
உறுதியாக இருக்க வேண்டும்

சோகமான நேரம்
மாறிப்போகும் வலிகள்
தொலைந்து போகும்
நண்பர்கள் இருந்தால்

சில மௌனங்கள்
சத்தமாக வலிக்கின்றன

ஊக்கமில்லை
என நினைக்கும் தருணம் தான்
தொடங்க வேண்டிய
சரியான தருணம்

அன்பாயிருங்க
அதுக்குனு அடிமையாயிடாதீங்க
இரக்கம் காட்டுங்க
ஆனால் ஏமாந்திடாதீங்க

சிறிய முன்னேற்றங்களும்
பெரிய வெற்றிகளை
உருவாக்குகின்றன

நம்மிடம் இருப்பது
இந்த நொடி
மட்டும் தான்

நிலவுக்கும்
ஒரு நாள்
விடுமுறை உண்டு
ஆனால்
உன் நினைவுக்கு
என்றும் விடுமுறை இல்லை

முடியாது என்று
யாராவது சொன்னால்
அவர்களுக்கு பதிலாக
முடியும் என்று
உன் செயலால் நிரூபி