முயற்சியில் விலை இல்லை
ஆனால் அதன் மதிப்பு
அளவில்லாதது

முயற்சி தொடங்கும் தருணமே
வெற்றியின் முதல் படியாகும்

வாழ்க்கை தோல்விகளை
வென்றவனை நாயகனாக்குகிறது
வெற்றிகளை கண்டு மயங்குபவனை
காமெடியாக்குகிறது

உன் வருங்காலம்
எப்படி இருக்கும் என
யாரும் தீர்மானிக்க முடியாது
நீ தான் உன் எதிர்காலத்தை
உருவாக்குபவன்

வெற்றிப் பயணத்தைத்
தாமதமாக்கும் பாரிகேட்
உங்கள் தயக்கமே

மகிழ்ச்சி என்பது
பணம் சார்ந்தது அல்ல
மனம் சார்ந்தது

நம் பயம் எதிரிக்கு தைரியம்
நம் அமைதி அவனுக்கு குழப்பம்
குழப்பத்தில் இருப்பவன்
எப்போதும் ஜெயித்ததில்லை

தோல்வி எனும்
சிறைச்சாலையை திறப்பது
முயற்சியெனும் சாவியால் மட்டுமே

தன்னை நியாயப்படுத்தி
கிடைக்கின்ற எதற்கும்
ஆயுள் குறைவு தான்
புரியாத பிரியங்கள் பிரிவுகளால்
முடிவை தரும்

முள்ளின் திறமை
என்னவென்றால்
தன்னை காலால்
மிதித்தவனை
தன் கையாலேயே
எடுக்க வைப்பது