வெற்றி எல்லோருக்கும்
கிடைப்பதில்லை ஆனால்
வெற்றி கிடைக்கக்
கூடிய தகுதி
எல்லோருக்கும் உண்டு

உனக்கெனக் கொள்கை வகு

காயங்களோடு சிரிப்பது
அவ்வளவு எளிதல்ல
அப்படி சிரிக்க பழகிக்கொண்டால்
எந்த காயமும் பெரிதல்ல

ஒருவனின் தெளிவான
குறிக்கோளே
வெற்றியின்
முதல் ஆரம்பம்

சிரமம் என்ற கடல்
உழைப்பின் படகில்
தாண்டி செல்ல முடியும்

சிலர் பேசாமல் இருக்கிறார்கள்
பேசினால் கண்ணீர் வாரும்
என்பதால்தான்

என் விருப்பத்தை
உன் விருப்பதிர்க்கேற்ப
தீர்மானித்துவிடாதே

நொடிகள் சேர்ந்து தான்
நாட்கள் ஆகின்றன
அதுபோல் சிறு முயற்சிகள்
சேர்ந்து தான் வாழ்க்கை உருவாகிறது

எத்தகைய சூழ்நிலைக்கு
வெளிப்படுத்தப் பட்டாலும்
ஒவ்வொரு சூழ்நிலையிலிருந்தும்
நல்ல நல்ல விஷயங்களை
எடுத்துக் கொள்ளுங்கள்

நான் சலித்து பின்
செல்பவன் அல்ல
எதுவாக இருந்தாலும்
சாதித்து முன் செல்பவன்