பயம்
மனதை முடக்கும் பூட்டு
தன்னம்பிக்கை
அதை திறக்கும் சாவி

நம்மிடம்
பேசுகின்ற அனைவரும்
உண்மையாக
தான் பேசுகின்றார்களா
என்று யோசிக்க ஆரம்பித்தால்
வாழ்க்கை நிம்மதி
இல்லாமல் போய்விடும்

வாழ்க்கை ஒரு தேர்வல்ல
அது ஒரு பயணம்
பயணிக்கத் தயார்
ஆகாதவனுக்கு
வழி தெரியாது

பின்னோக்கிப் பார்க்காதே
எப்போதும் முன்னோக்கி
நீ எதைச் செய்ய
விரும்புகிறாயோ
அதையே பார்
நீ முன்னேறுவது உறுதி

ஆயிரம் பேர் ஆயிரம்
பேசுவார்கள் அந்த
ஆயிரத்துக்கும் பதில்
சொல்ல ஆரம்பித்தால்
ஆயுளும் போதாது

கடினமான நாட்களே
இனிய நினைவுகளாக மாறுகின்றன

மகிழ்ச்சியை
வெளியே தேடாதே
அது உள்ளேயே இருக்கிறது

பொழியும் மழைத் துளிகளுக்கு
தெரிவதில்லை பல உயிர்களின்
தாகத்தை தீர்க்கத் தான் சென்று
கொண்டு இருக்கிறோம் என்று

சிறிய சந்தோஷங்களை
ரசிக்கத் தெரிந்தால்
மனம் எப்போதும் இலகுவாகும்

சில சந்தர்ப்பங்கள்
போய் விடும் ஆனால் அதில
கற்ற பாடம் எப்போதும் இருக்கும்