நினைவை தூவுகிறாய்
நிஜமாய் உணர்கிறேன்
நீ உடனிருப்பதாய்
நினைவை தூவுகிறாய்
நிஜமாய் உணர்கிறேன்
நீ உடனிருப்பதாய்
உடல் பேசும் மொழி
இதயம் புரிந்துகொள்ளும் நேரம்தான்
உண்மை பிணைப்பு
கண்கள் பேசும் பாசத்தை
மொழிகள் அணுக முடியாது
உன் பேரழகில்
அடங்கும் சூரியன்
என் இதயத்தில்
மீண்டும் உதிக்கிறது
அன்பு என்பது
இதயத்தின் மென்மையான மொழி
மறக்க நினைக்காத
நினைக்க சலிக்காத
உறவென்றால் அது
நீ மட்டுமே
என்றோ யோசிக்காமல்
கிறுக்கியவைகள் எல்லாம்
உன்னில் நேசம்
கொண்டுதான்
என்றுணர்கிறேன்
நீ வாசிக்கும் போது
தொடர்வதை
நிறுத்திவிடாதே
களைத்துவிடுமென்
பயணம்....
காதல் என்பது
கண்கள் சந்திக்கும் நேரத்தில்
நேரம் நிற்கும் அதிசயம்
மழையென கொள்கிறேன்
உனை முழுமையாய்...
நனைத்து விடு
எனை
தினம் தினம்
உன் அன்பால்...
புரிதல்களால்